ரயில் விபத்துக்கு இதுதான் காரணமாம்
தெலங்கானாவில் விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்த விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற ஃபலக்னுமா விரைவு ரயிலில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். மேலும், ஃபலக்னுமா விரைவு ரயிலில் 5 பெட்டிகள் சேதமடைந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், முதலில் S-4 கோச் கழிவறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.Tags :