மண் சரிவு.. பெண் உயிரிழப்பு

by Editor / 30-09-2024 08:37:03am
மண் சரிவு.. பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஜெயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். அவரது வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்ட நிலையில், வாசலில் நின்ற ஜெயலட்சுமியும் அந்த மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த மீட்பு குழுவினர், வீட்டில் இருந்த ஜெயலட்சுமியின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமின்றி மீட்கப்பட்டனர்.

 

Tags : மண் சரிவு.. பெண் உயிரிழப்பு

Share via