கேரளாவில்  9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை.

by Editor / 30-09-2024 08:39:42am
கேரளாவில்  9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை.

கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும். செப்டம்பர் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துவிடும். இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. கடந்த சில தினங்களாக மழையின் தீவிரம் சற்று குறைந்து இருந்தது.

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்,கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை பெய்யும் எனவும் மணிக்கு 40முதல் 55 கிமி வேகத்தில் காற்று வீசும் என்பதால், கேரள கடல் பகுதியில் கடல் அலை ஆக்ரோஷமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மறு அறிவிப்பு வெளியாகும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : கேரளாவில்  9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை.

Share via