ஐ .என். டி. யூ. சி. தொழிற்சங்க பேரவை பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.

by Admin / 09-01-2024 12:42:38am
 ஐ .என். டி. யூ. சி. தொழிற்சங்க பேரவை பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.

 தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து  25  தொழிற்சங்கங்கள் நாளை  முதல்  பேருந்துகள் இயங்காது என்று அறிவித்து உள்ளன. .இந் நிலையில் ஐ .என். டி. யூ. சி. தொழிற்சங்க பேரவை பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக  பொங்கல்   பண்டிகை இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் தொழிற்சங்கங்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்தும் அறிவித்துள்ளது. சட்டவிரோதம் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டுள்ளது ...நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

 

பொது மக்களின் நலன் கருதி ஐ என் டி யூ சி தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via