ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் - சிபிசிஐடி கைக்கு மாறிய வழக்கு

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப். 6ஆம் தேதி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேந்திரனின் காா் ஓட்டுநா் சதீஷ் மற்றும் உதவியாளா்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Tags :