கன்னியாகுமரியில் ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு

கன்னியா குமரியில் அமைந்துள்ள நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாறை ஆகியவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு பயண கட்டணம் ஜூன் 5 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
• சாதாரண பயணிகளுக்கான கட்டணம் ₹75 லிருந்து ₹100 ஆக உயருகிறது. • மாணவர்களுக்கு சலுகை கட்டணம் 30 ல் இருந்து ₹40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. • சிறப்பு கட்டணப் படகு ₹300ல் எந்த மாற்றமும் இல்லை.இந்த உயர்வு சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : கன்னியாகுமரியில் ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு