இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திபேசியதற்கு நிதியமைச்சா் நிர்மலாசீதாராமன் பதில்.
இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பொருளாதார புயல் மற்றும் நெருக்கடி குறித்த எச்சரிக்கைகளுக்கு பாஜக மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சர்வதேச பிரச்சனைகள் காரணமாக இந்தியா இதுவரை இல்லாத பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்ததோடு இந்த பொருளாதார நெருக்கடி அதானி அம்பானி போன்ற பெரிய சூப்பர் ஏட்டுக்களையோபிரதமர் மோடியையோ பாதிப்படைய செய்யாது என்றும் இளைஞர்கள் தொழிலாளர்கள் சிறு வணிகர்கள் போன்றவர்களை அதிகம் பாதிக்கும் என்றும் உண்மையான பிரச்சனைகளான வேலையில்லா திண்டாட்டம் உற்பத்தி துறை வீழ்ச்சி போன்றவற்றை மத்திய அரசு உதாசீனப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுல் காந்தி இல்லாத ஒரு நெருக்கடியை சித்தரித்து இந்திய மக்களின் சாதனைகளை குறைத்து மதிப்பீடுகிறார் என்றும் உலக அளவில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் ஜிடிபி மற்றும் சர்வதேச நாணய நிதியும் தரவுகளின் படி இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், ராகுல் காந்திக்கு பொருளாதாரம் குறித்த முதிர்ச்சியோ அல்லது புரிதலோ இல்லை என்றும் ஆக்கபூர்வமான திட்டங்கள் இல்லாததால் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நிலையாக உள்ளதாகவும் ராகுல் காந்தியின் எச்சரிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் விமர்சித்து உள்ளனர்.
Tags :

















