மணிப்பூரில் நிலவி வரும் பதற்றம் மீண்டும் ஊரடங்கு ஏழு மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு.

by Editor / 16-11-2024 11:57:48pm
மணிப்பூரில் நிலவி வரும் பதற்றம் மீண்டும் ஊரடங்கு ஏழு மாவட்டங்களில் இணைய சேவை  துண்டிப்பு.

இம்பால்: மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் போராட்டத்தால் மேற்கு இம்பாலில் மீண்டும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 பேர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாஜக எம்.எல்.ஏ. சபம் கொஞ்சகேசு வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். மற்றொரு எம்.எல்.ஏ. சபம் நிஷிகந்தா மற்றும் ஆர்.கே. லிமோ வீடுகளும் சூறையாடப்பட்டன. பதற்றம் காரணமாக இம்பால் மேற்கு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன

 

Tags : மணிப்பூரில் நிலவி வரும் பதற்றம் மீண்டும் ஊரடங்கு ஏழு மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு.

Share via