அதிமுக தனித்து போட்டியிடத் தயார்- செல்லூர் ராஜூ,

by Editor / 14-10-2021 06:45:28pm
அதிமுக தனித்து போட்டியிடத் தயார்- செல்லூர் ராஜூ,

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக தனித்து போட்டியிடத் தயார் எனக் கூறியிருக்கிறார்.மதுரை மாவட்டம் பரவையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, வெற்றி தோல்வி மாறி மாறி வரக்கூடியது என்பதால் தொண்டர்கள் துவளக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், விரைவில் நடைபெறவுள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடத் தயார் என்று கூறினார். இதேபோல் கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி திமுகவும் தனித்து போட்டியிடத் தயாரா என வினவினார்.

 

Tags :

Share via

More stories