சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி. பாலாஜி, நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், நீதிபதி ஆர். கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி. திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களோடு சேர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த புதிய உத்தரவின் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 63-ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராமச்சந்திர ராவ், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எம்.எஸ்.ராமசந்திர ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் கைட் , மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இந்திர பிரசன்னா முகர்ஜி , கேரளா உயர்நீதிமன்றத்தின் நிதின் மதுகர் ஜம்தார் ஆகியோர் தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags : சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்.