யுஜிசி விதி:முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.

by Editor / 09-01-2025 01:29:03pm
யுஜிசி விதி:முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.

யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக வரைவு விதிமுறையை திரும்பப் பெற வேண்டும். இந்த வரைவு விதிமுறை அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாச்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

 

Tags : யுஜிசி விதி:முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.

Share via

More stories