மதுரையில் உயிரிழந்த வீரரின் உடல் சொந்த ஊருக்கு சென்றது.

மதுரை அருகே வயிற்று வலியால் இந்தோ திபெத் போலீஸ்காரர் உயிரிழந்தார். மதுரை அருகே இடையபட்டி இந்தோ திபத் முகா மில் போலிஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் மனோகர் இவருக்கு கடந்த ஒரு வாரமாக வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரிசோதனைக்கு பின்னர் விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இவரின் உடல் ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே வீரர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
Tags :