வாலிபர் அடித்துக் கொலை

by Staff / 13-09-2022 03:47:34pm
வாலிபர் அடித்துக் கொலை

 ஷாஜதா பாக் சாலையில் உடம்பில் பலத்த காயங்களுடன், தலை முடி வெட்டப்பட்டு ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் இசார்(19) எனும் இளைஞன் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்து கைப்பேசி ஒன்றைத் திருடியுள்ளார். இதை தொழிற்சாலையிலிருந்த கியானி பார்த்து சிலருடன் இசாரை பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பெல்டால் கடுமையாக தாக்கினார். இதனால் படுகாயமடைந்த இசார் உயிரிழந்தார். இந்நிலையில் போலீசார் முக்கிய குற்றவாளியான கியானி மற்றும் மற்ற குற்றவாளிகளை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories