இந்திய அரசின் 5 முதல் 10 சதவீத எல்.ஐ.சி.பங்குகளை விற்க திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் 5 முதல் 10 சதவிகிதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்து, அதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை திரட்ட இந்திய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக நிறுவனத்தை ரூ.8 முதல் ரூ.10 லட்சம் கோடி வரை மதிப்பீடு செய்ய கோரியுள்ளது. விரிவடைந்து வரும் பட்ஜெட் இடைவெளியை நிரப்புவதற்கு பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்குள்ள பங்குகளை விலக்குவதன் மூலம் மார்ச் மாதத்திற்குள் 1.75 லட்சம் கோடி ரூபாயை திரட்ட இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எல்.ஐ.சி.,யின் 5 முதல் 10 சதவிகித பங்குகள் விற்பனை, அரசின் மிகப்பெரிய இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான பணிகள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செயல்முறையை தொடங்க, வங்கியாளர்கள் கடந்த வாரம் அரசு மற்றும் எல்.ஐ.சி. அதிகாரிகளை முறையாக சந்தித்தனர்.
நிதி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ''பங்கு விற்பனை மூலம் ரூ.40,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை திரட்ட அரசு எதிர்பார்க்கிறது. தொடக்க பேச்சுவார்த்தைகளின் படி ரூ.8 முதல் ரூ.10 லட்சம் கோடி வரை நிறுவனத்தை மதிப்பீடு செய்ய கோரியுள்ளனர் என கூறியுள்ளனர்.
Tags :