சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்.13ம் தேதியுடன் நிறைவு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஒரு வாரம் முன்கூட்டியே வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்கூட்ட முடிவை, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒரு வாரம் முன்னதாகவே முடிவடையும் என தெரிவித்தார்.
முன்னதாக செப்டம்பர் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் முன்னதாக, செப்டம்பர் 13-ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14ம் தேதி வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ந்நிலையில் மாநிலங்களவை தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், முதலமைச்சரின் டெல்லி பயணம் உள்ளிட்ட காரணங்களால், கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :