அமெரிக்க ராணுவம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறை பிடித்துள்ளது.

by Admin / 04-01-2026 02:04:39am
 அமெரிக்க ராணுவம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறை பிடித்துள்ளது.

அமெரிக்கா வெனிசுலாம் மீது நடத்திய ஒரு பெரிய ராணுவ தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க ராணுவம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறை பிடித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் உயர் அடுக்குக்கு சிறப்புப்படையான டெல்டா போஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது இதற்கு ஆபரேஷன் அப்சல்யூட் ரிசல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. மதுரோவும் அவரது மனைவியும் போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புடன் சதி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. மதுரை அவரது மனைவி அமெரிக்க கடற்படை கப்பலில் நியூயார்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பாதுகாப்பான மற்றும் சரியான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்க தற்காலிகமாக வெனிசுலாவை வழிநடத்தும் என்று அறிவித்துள்ளார். இதற்கு வெனிசுலாவின் துணை அதிபர் இது மிகவும் கடுமையான ராணுவ ஆக்கிரமிப்பு என்றும் மதுர உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்க வான்வழி படை வெனிசுலா ஆறு இடங்களில் தாக்குதலை நடத்தியதின் காரணமாக வெனிசுலா வான்வழி பரப்பில் அமெரிக்க ராணுவம் பறக்க தடை விதித்துள்ளது..

 

Tags :

Share via
Logo