ரயில் பயண சீட்டு பரிசோதகரை தாக்கிய 4 பேர் ரயில்வே போலீசார் விசாரணை.

by Editor / 13-09-2023 10:44:00pm
 ரயில் பயண சீட்டு பரிசோதகரை தாக்கிய 4 பேர் ரயில்வே போலீசார் விசாரணை.

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்(ரெயில் எண் 16340) நாகர்கோவிலில்  இருந்து நேற்று புறப்பட்டு மதுரை வழியாக வந்தது, இந்த ரெயிலில் மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (வயது 34) என்ற டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து ஏறினார்,  அதன் பிறகு ஒவ்வொரு பெட்டியாக டிக்கெட்  பரிசோதனை செய்து வந்தார், அந்த ரெயில் நாமக்கல் அருகே வந்து கொண்டிருந்தபோது எஸ் - 6  பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட் சரிபார்த்து வந்தார், அப்போது அந்த பெட்டியில் மதுரையில் இருந்து நாசிக் பயணம் செய்த எஸ்.ஆர்.சாங்லே என்ற  பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் பரிசோதனை செய்தார், அப்போது அந்த நபர் முன்பதிவு செய்த டிக்கெட்டில் ஒருவர் பயணம் செய்யவில்லை என தெரியவந்தது, இதையடுத்து பயணம் செய்யாத நபரின் இருக்கைக்கு வேறு ஒருவருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்தார், அப்போது டிக்கெட் பரிசோதருக்கும், நாசிக் நகருக்கு பயணம் செய்த பயணிக்கும் இடையே வாக்குவாதம் உருவாக்கி  தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் வினோத்குமாரை  நாசிக் பகுதியை சேர்ந்த   துக்காராம் (வயது 60), கோவர்தன் லால்  (வயது 42),எஸ்.ஆர்,சாங்லே (வயது 52), கைலாஷ் சாங்லே(வயது 63) ஆகியோர் சேர்ந்துதாக்கி உள்ளனர், இதில் அவருக்கு கழுத்துப்பகுதியில்  காயம் ஏற்பட்டுள்ளது, இதையடுத்து இந்த சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகர் வினோத் குமார் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்,  

நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது, அந்த ரெயிலில் ரயில்வே அதிகாரிகள் , ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்வே போலீசார் ஆகியோர் ஏறினர், அதன் பிறகு டிக்கெட் பரிசோதகர் வினோத் குமாரை தாக்கிய நாசிக்கை சேர்ந்த துக்காராம் (வயது 60), கோவர்த்தன் லால் (வயது 42),எஸ்.ஆர்,சாங்லே (வயது 52), கைலாஷ் சாங்லே(வயது 63) ஆகிய 4 பேரை ரெயில் பெட்டியிலிருந்து  கீழே இறக்க முயற்சி செய்தனர், இதனைத்தொடர்ந்து இவர்களுடன் பயணம் செய்த நாசிக்பகுதியை சேர்ந்த  150 க்கும் மேற்பட்ட பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், 

நீண்ட நேரத்திற்கு பிறகு நான்கு பேரையும் ரெயிலில் இருந்து போலீசார் ரெயில் நிலையத்தில் கீழே இறக்கினர்,அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர், அதன்பிறகு அவர்களை அதே ரெயிலில் அனுப்பி வைத்தனர், இதனால் நாகர்கோவில்-  மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் காலதாமதமாக  மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றது, 

மேலும் இது குறித்து டிக்கெட் பரிசோதகர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் சேலம் ரெயில்வே போலீசார்  பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் , அடித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர், 

 

Tags : mumbai

Share via