மனோ தங்கராஜ் அமைச்சரான பின்னணி காரணம்

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டம் பத்மனாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். இதற்கு பின்னணியில் உள்ள காரணம் 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். ஏனெனில் குமரியில் பாஜகவுக்கு பலம் உள்ள நிலையில் அதிமுக கூட்டணி கூடுதல் பலம் சேர்க்கிறது. அதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மனோ தங்கராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags :