அரசு பஸ் மோதியதில் தம்பதி துடிதுடித்து பலி

கேரளா: ஷாம் சசிதரன் (58) மற்றும் அவர் மனைவி ஷீனா (51) ஆகியோரின் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்க்க தம்பதி நேற்று (ஜூன். 30) மாலை இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரில் வந்த அரசுப் பேருந்து அவர்கள் வாகனம் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் சந்தோஷ்குமார் போலீசில் சரணடைந்தார்.
Tags :