கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுப்பட்ட அதிமுக பிரமுகர் கைது.
சேலம் மாவட்டம்ஆத்தூர் கல்லாநத்தம் மாரியம்மன் கோவில் செயின்ட்செல்லமுத்துஎன்பவரது மகன் சுரேஷ் என்ற சுரேஷ்குமார்,@ சுரேஷ்குமார் @ கல்லாநத்தம் சுரேஷ் முன்னாள் அதிமுக விவசாயப் பிரிவு ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர்.இவர் கல்வராயன் மலையில் 25 ஏக்கர் பரப்பளவில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்ததைத்தொடர்ந்து இன்று அவனை போலீசார் கைது செய்தனர். சோதனையின் போது கூடுதல் போதைக்காக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஊமத்தங்காயை அரைத்து அதன் சாற்றை சாராயத்தில் கலந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அமைந்துள்ள மணப்பாச்சி கிராமத்தில் மதுபானம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். IMFL பாட்டில்களை விற்றதாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது தாயார் சரோஜாவைக் கவனிக்க அடிக்கடி அவர் தனது சொந்த ஊரான ஆத்தூருக்குச் செல்வார்.கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி சுரேஷ் மீது கொலை, அடிதடி, சாராயம் மற்றும் மணல் கடத்தல் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுப்பட்ட அதிமுக பிரமுகர் கைது.