கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு
ஜனவரி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னையில் தொடங்கியது. இதனை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் தமிழகம் வந்திருந்தார். இந்நிலையில் 13 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டுப்போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பதக்கப்பட்டியலில் தமிழினது 8ம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :



















