by Staff /
03-07-2023
03:54:05pm
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நான்கு இளைஞர்களால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் ஜூன் 29ஆம் தேதி அன்று துர்வா பகுதியில் நடந்துள்ளது. 15 வயது சிறுமி ஒருவர் ஜெகநாதர் திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்த போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவன் சிறுமியை இறக்கிவிடுவதற்காக கூறி பைக்கில் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று மூன்று பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறையை அணுகியபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
Tags :
Share via