by Staff /
03-07-2023
04:00:52pm
மணிப்பூரில் மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறை வெடித்ததில் கிட்டத்தட்ட 110க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் வன்முறையால் சுமார் 12,000 பேர் மிசோரம் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய மத்திய அரசு நிதி வழங்காததால், நன்கொடை மூலம் நிதி திரட்ட மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இதற்கென குழு அமைக்கப்பட்டு மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.
Tags :
Share via