by Staff /
03-07-2023
04:04:24pm
கடலூர் மாவட்டத்தில் பலருக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் இருந்தே கடலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக குவிந்த காரணத்தால் மருத்துவமனை ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கடலூர் மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் பலருக்கும் மர்ம காய்ச்சல் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த மர்ம காய்ச்சலுக்கு பலியானதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. திடீர் என ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.
Tags :
Share via