தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜன.16இல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றஞ்சாட்டி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :