தூத்துக்குடியில் பயங்கர வெடி விபத்து: 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்  

by Admin / 21-09-2021 11:47:47pm
தூத்துக்குடியில் பயங்கர வெடி விபத்து: 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்  


 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வெடி விபத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் ஆவ்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே குமரன்விளையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது  காரில் வெடிகளை வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக நள்ளிரவு காரில் இருந்த வெடிகள் வெடித்து கார் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. இதனையடுத்து போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தடய அறிவியல் துறை நிபுணர்கள் குழு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றனர்.  பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா மற்றும்  சாத்தான்குளம் வட்டாட்சியர் விமலா ஆகியோரும் விபத்தை ஆய்வு செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo