கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு என்று காலை 7.00 மணிக்கு தொடங்குகிறது.
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு என்று காலை 7.00 மணிக்கு தொடங்குகிறது. காலை 7.00 மணி முதல் மாலை 6 .00மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது . ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமைதான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இருப்பினும் ,பல தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி களமிறங்கி உள்ளதால் மும்முனைப் போற்றி நிலவுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கேரளாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் .வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இறுதி கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Tags :



















