சிறை கொடுமைகளுக்கு அஞ்சாத இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொரோனாவக்கா பயப்பட போகிறான் .

by Admin / 09-04-2026 06:35:59am
சிறை கொடுமைகளுக்கு அஞ்சாத இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொரோனாவக்கா பயப்பட போகிறான் .

தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  டி.பி .சத்திரம், தியாகராய நகர் பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் ஆற்றினார். அப்பொழுது அவர் திமுக ஆட்சி காலத்தில் பெரு வெள்ளமோ வறட்சியோ அல்லது கொரோனாவோ வரவில்லை. அப்படி வந்திருந்தால் அவர் அன்றே கொரோனாவுக்கு பலியாகி இருப்பார் என்று சர்ச்சைக்குரிய ஒரு பேச்சை மக்கள் முன்னால் பேசினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பழனிச்சாமி, அரசியலுக்கு வருவதற்கு முன்பே 1976- இல் நான் மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறை கொடுமைகளை அனுபவித்தவன் என்றும் சிறை கொடுமைகளுக்கு அஞ்சாத இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொரோனாவக்கா பயப்பட போகிறான் என்றும் காட்டமாக கேள்வியை எழுப்பினார். கொரோனா உச்ச கட்டத்தில் இருந்த பொழுது தன் உயிரை பொருட்படுத்தாமல் கவச உடைய அணிந்து கொண்டு கொரோனா வார்டுகளுக்கு சென்று நோயாளிகளை சந்தித்ததை சுட்டி காட்டிய முதலமைச்சர் ,இந்த செயலால் தனது மனைவி துர்கா ஸ்டாலின் தன்னுடன் ஒரு வாரம் பேசாமல் இருந்ததாகவும் ,சத்தியமாக சொல்கிறேன் என்று சொன்னார். இதுவரைக்கும் யாரிடம் சொல்லாத ஒன்றை நான் சொல்கிறேன் என்று சொல்லி இந்த செய்தியை வெளியிட்டார். எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசுவதாக விமர்சித்த முதலமைச்சர் உயிரிழப்பு குறித்து பேசுவது அரசியல் நாகரீகம் அற்ற செயல் என்றும் கண்டனத்தை பதிவு செய்தார்.

 

Tags :

Share via

More stories

Logo