2 வாக்காளர் அட்டை.. துணை முதல்வருக்கு நோட்டீஸ்

by Editor / 11-08-2025 01:25:25pm
2 வாக்காளர் அட்டை.. துணை முதல்வருக்கு நோட்டீஸ்

பீகாரின் துணை முதல்வர் விஜய் சின்ஹா, 2 அடையாள அட்டை வைத்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு விஜய் சின்ஹா, 'பாட்னாவில் வாக்காளராக இருந்தேன். கடந்த ஆண்டு சொந்த ஊரான லக்கிசராய் சட்டமன்ற தொகுதியில் எனது பெயரை சேர்க்க விண்ணப்பித்திருந்தேன். மேலும், பாட்னாவிலிருந்து எனது பெயரை நீக்கவும் விண்ணப்பித்திருந்தேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து சின்ஹா ஆகஸ்ட் 14-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via