பாஜக வானதி சீனிவாசன் பேட்டி
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று அளித்த பேட்டியில், 'வடக்கு இரயில் நிலையத்தை பார்வையிட மத்திய இணை அமைச்சர் கேட்டுக்கொண்டதை அடுத்து வந்துள்ளார். 11 கோடி மதிப்பீட்டில் அம்ரித் திட்டத்தில் புதிய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகள் மற்றும் தொழில் அமைப்பினர் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர். பயணிகளுக்கும், சரக்கு பொருட்கள் எடுத்து செல்வதற்கும் இந்த இரயில் நிலையம் முக்கியம் பங்கு வகிக்கிறது. உலக தரத்தில் கோவை இரயில் நிலையத்தை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஜவுளித்துறை நிகழ்விற்காக வந்திருந்த இணை அமைச்சரை என்னுடைய தொகுதி எனக்கூறி அவரை அழைத்து வந்து கோரிக்கைகளை பெற செய்துள்ளேன். ரக்ஷா பந்தன் பரிசாக இத்தனை ஆண்டுகள் இல்லாத நிலையில் 11 கோடி பிரதமர் வழங்கியுள்ளார். இதனை நமக்கான பரிசாக வைத்துக் கொள்ள வேண்டும். பாரத பிரதமர் அவர்கள் மேற்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை உலக தரத்தில் மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது' என தெரிவித்தார்.
Tags :