தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

by Editor / 10-10-2022 09:11:24pm
தமிழக அமைச்சரவை கூட்டம்  வரும் 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via