பச்சை துண்டுடன் வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்ச். 15) தாக்கல் செய்கிறார். இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் மட்டுமின்றி பல திமுக எம்.எல்.ஏ-க்கள் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில், “வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார். மேலும், “கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது"
“முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும்” என அறிவித்துள்ளார். மேலும், “நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும். இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்த்தப்படும்”
நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய "நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம்' செயல்படுத்தப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், நெல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கை வேளாண் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
Tags : பச்சை துண்டுடன் வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள்ச்சை