ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் ஏன் அச்சிடக் கூடாது ....எம்.பி.மணீஷ் திவாரி

by Staff / 27-10-2022 01:59:58pm
ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் ஏன் அச்சிடக் கூடாது ....எம்.பி.மணீஷ் திவாரி

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படத்தை ஏன் அச்சிடக் கூடாது என காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படமும், மறுபக்கம் அம்பேத்கர் படத்தையும் அச்சிட வேண்டும் எனவும், அகிம்சைவாதம், சமத்துவம் பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமை அம்பேத்கர் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். முன்னதாக ரூபாய் தாளில் பிள்ளையார் மற்றும் வரலட்சுமி படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் இடம் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபையும் கோரிக்கை விடுத்தனர்.

 

Tags :

Share via

More stories