எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைத.துப்பாக்கி சூடு.

by Editor / 28-01-2025 10:57:42am
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைத.துப்பாக்கி சூடு.

இந்திய கடல் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அவர்கள் மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இதற்கிடையே, கடந்த 25ம் தேதி இரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், குடியரசு தினத்தன்று  அதிகாலை 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து 34 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் 13 பேர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 13 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். தப்பிச் செல்ல முயற்சித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைத.துப்பாக்கி சூடு.

Share via