அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.

by Staff / 04-07-2023 12:34:46pm
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு. செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது. அவரை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு.அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி நிஷா பானு.உடனடியாக விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவு/ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல - நீதிபதி பரத சக்கரவர்த்தி.நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை - நீதிபதி பரத சக்கரவர்த்தி.அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கில் 3வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை.
 

Tags :

Share via