10 நிமிடத்தில் செய்யலாம் ஃப்ரூட் கஸ்டர்டு

by Staff / 23-03-2022 03:05:08pm
10 நிமிடத்தில் செய்யலாம் ஃப்ரூட் கஸ்டர்டு

குழந்தைகள் பழங்களை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இவ்வாறு ஃப்ரூட் கஸ்டர்டு போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

பால் - ஒரு கிளாஸ்,
கஸ்டர் பவுடர் - இரண்டு தேக்கரண்டி,
நறுக்கிய பழங்கள் - ஒரு கப் (வாழை, அன்னாசி, கொய்யா, மாதுளை முத்துகள், ஆப்பிள்),
நாட்டு சர்க்கரை - தேவைக்கு

செய்முறை

ஒரு கப் பாலில், இரண்டு தேக்கரண்டி கஸ்டர் பவுரை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அதனோடு நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்தால், பால் கெட்டியாக வரும். அதை பிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து வெளியே எடுங்கள்.

இப்போது குளுகுளுவென பால் கலவை ரெடியாகி இருக்கும்.

அதில் நறுக்கி இருக்கும் பழங்களை கலந்து உடனடியாகவும் சுவைக்கலாம். அல்லது மீண்டும் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தும் சாப்பிடலாம்.

சூப்பரான ஃப்ரூட் கஸ்டர்டு ரெடி.

 

Tags :

Share via