என்ன இப்படி இறங்கிட்டாங்க - சென்னை மாநகராட்சி!

by Editor / 17-05-2021 10:55:31am
என்ன இப்படி இறங்கிட்டாங்க - சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை.

நேற்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா உறுதியானது. 311 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் மட்டுமே 6,247 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், சென்னையில் 30க்கும் அதிகமானோர் வசிக்கும் இடங்களிலும் நிறுவனங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முகாம் அமைக்கும் இடங்களில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள கீழ்க்காணும் லிங்க்கில் விண்ணப்பிக்கலாம் என்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories