தங்கள் கட்சி எம்.எல்.ஏவை தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் மூலம் கடத்திச் சென்று விட்டதாக குற்றச் சாட்டு

by Admin / 09-05-2026 12:10:12am
தங்கள் கட்சி எம்.எல்.ஏவை தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் மூலம் கடத்திச் சென்று விட்டதாக குற்றச் சாட்டு

அம்மா முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து விட்டு வந்தவர் காரில் அமர்ந்திருந்தபடியே செய்தியாளர்களுக்கு தாம் எதற்காக ஆளுநரை சந்தித்து விட்டு வந்தேன் என்பது குறித்து செய்தியாளரிடம் பேசினார். மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற தங்கள் கட்சி எம்.எல்.ஏவான எஸ். காமராஜ் தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் மூலம் கடத்திச் சென்று விட்டதாக குற்றம் சாட்டினார். மன்னார்குடி தொகுதியில் அம்மா முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வந்த காமராஜ் புதுச்சேரியில் உள்ள அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து மர்மமான முறையில் காணவில்லை என்றும் குதிரை பேரம் நடந்து உள்ளதாகவும் அவரோடு போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் விஜயின் தமிழக வெற்றி கழகம் அவரை தட்டி தூக்கி உள்ளதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆளுநரிடம் இது குறித்து புகார் தெரிவித்திருப்பதாகவும் இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் இது குதிரை பேரம் என்றும் ஆளுநரிடம் டி.டி.வி தினகரன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனது கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதிப்படுத்தியதோடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லாததால் தமிழக வெற்றி கழகம் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் விமர்சனத்தை முன்வைத்தார்.

 

Tags :

Share via
Logo