தென்காசி அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 2பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் 100 லிட்டர் சாராயம் பறிமுதல்.
தென்காசி அருகே உள்ள ஆயிரபேரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பெயரில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஆயிரபேரியை சேர்ந்த முருகையா என்பவரது மகன் கனகராஜ் (31 )மற்றும் பாட்டபத்து கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் ராமகிருஷ்ணன் (46) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 100 லிட்டருக்கு மேலான சாராயத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கண்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.
Tags :