மரத்தின் நடுவே குலை தள்ளிய அதிசய வாழை

ஒட்டுவாழை ரகங்களில் சத்துக்குறைபாடு இருந்தால் மரத்தின் நடுப்பகுதி மற்றும் அடிமரத்தில் குலைவிடும்.
ஒட்டுவாழை ரகங்களில் சத்துக்குறைபாடு இருந்தால் மரத்தின் நடுப்பகுதி மற்றும் அடிமரத்தில் குலைவிடும்.
உடுமலை அடுத்த ஆலாம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 அடி உயரம் வளர்ந்த ரஸ்தாளி வகையை சேர்ந்த ஒரு வாழை மரத்தின் நடுவில் குலை தள்ளி உள்ளது. அதாவது 3 அடி உயரத்திற்கு மரத்தின் நடுப்பகுதியில் பூவில் இருந்து காய்கள் காய்த்து தற்போது வாழைத்தாராக காட்சியளிக்கிறது.
பொதுவாக வாழை மரங்கள் மேற்பகுதியில் இலைகளுக்கு இடையே இருந்தே குலை தள்ளும். ஆனால் மரத்தின் நடுவே குலை தள்ளிய இந்த அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
ஒட்டுவாழை ரகங்களில் சத்துக்குறைபாடு இருந்தால் இவ்வாறு மரத்தின் நடுப்பகுதி மற்றும் அடிமரத்தில் குலைவிடும். அந்த மரத்தில் விளைச்சல் குறைவாக இருக்கும் என்றனர்.
Tags :