அரசியல் சட்டப்படி ,புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்துட வேண்டும்-தி. மு க தலைவர் மு. க. ஸ்டாலின்-

by Staff / 09-05-2026 12:19:07am
 அரசியல் சட்டப்படி ,புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்துட வேண்டும்-தி. மு க தலைவர் மு. க. ஸ்டாலின்-

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் தன் வலைதள பக்கத்தில்,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையம் பிறப்பித்து விட்டார் ..இப்படி ஒரு நிலையில் தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும் மாநிலத்தின் நலனை முன்னெடுத்து செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மிக முக்கிய பணி. .இந்த சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு , அரசியல் சட்டப்படி ,புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்துட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo