இன்று மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி  புதிய ஆட்சியை அமைக்கிறது.

by Admin / 09-05-2026 12:49:08am
இன்று மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி  புதிய ஆட்சியை அமைக்கிறது.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை  புதிய ஆட்சியை அமைக்க உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ப்ரீகேட் பரேட் மைதானத்தில்  காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. 294 தொகுதிகளில் பாஜக 206 தொகுதிகளை வென்று மேற்குவங்க வரலாற்றில் கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரசுக்கு அடுத்தபடியாக ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறி வருகிற நிலையில்,சட்டசபையும் கலைக்கப்பட்டு. பாஜக ஆட்சி அமைய உள்ளது.முதலமைச்சராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்படுள்ளாா்.நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி,உள்துறைஅமைச்சா் அமித்ஷா பங்கேற்க உள்ளனா்.

 

Tags :

Share via

More stories

Logo