நீட் எனும் தேர்வு முழுக்க முழுக்க முறைகேடுகளுக்காக..-.திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின்

by Admin / 22-07-2026 10:22:28am
நீட் எனும் தேர்வு முழுக்க முழுக்க முறைகேடுகளுக்காக..-.திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்திரியில் இருந்து பாராளுமன்ற முகப்பு வரை தொடர் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினுடைய மாணவர் எழுச்சி போராட்டம் மாநிலங்களையும் பற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில்,

தலைநகர் டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாட்டின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீட் எனும் தேர்வு முழுக்க முழுக்க முறைகேடுகளுக்காக design செய்யப்பட்டது என முதன்முதலில் எச்சரித்தது நாம்தான். அதனால்தான், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே நீட்டின் தீமைகளை எடுத்துச் சொல்லித் தி.மு.க. எதிர்த்து வருகிறது.

இந்தியாவுக்கே முன்னோடியாகச் சமூகநீதியைப் பாதுகாக்கப் போராடி, First Constitutional Amendment-க்கு வழிகோலிய தமிழ்நாட்டின் கோரிக்கையும் நீட் ஒழிப்பு என்பதே.

மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும் நீட் என்பதே இந்தப் போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். நீட் ஒழிப்பே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும். இவ்வாறு தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via
Logo