தமிழக முதலமைச்சர் விஜய் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு தனது கடும் கண்டனம்

by Admin / 22-07-2026 11:41:49pm
 தமிழக முதலமைச்சர் விஜய் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு தனது கடும் கண்டனம்

நீட் தேர்வு குளறுபடி வேலை வாய்ப்பு இன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு சோனம் மாங் சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி களத்தில் இறங்கியது. நீட் முறைகேடு காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை உள்ளடக்கி ஜந்தர் மந்தரில் இருந்து பாராளு மன்றம் நோக்கி இளைஞர்கள் ஆவேசமாக போராட்ட த்தை முன்னெடுத்தனர். காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீர் பீரங்கி வண்டியின் மூலமாக தண்ணீரை பீச்சி அடித்தும் பல்வேறு வழிகளில் அவர்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு செயல்பட்டனர். டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. இருப்பினும் இளைஞர்களின் போராட்டம் வெகு வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. இந்த தருணத்தில்  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி பிரதமர் இல்லம் நோக்கி சென்றனர். அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினரும் நாடு முழுவதும் போராட்டங்களை மேற்கொண்டனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் ராகுல் காந்தி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு தனது கடும் கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அவர் ஜனநாயகத்திற்கு இந்த கைது நடவடிக்கை எதிரானது என்றும் பிரதமர் இல்லத்தை முற்றுகிட முயன்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட விதம் கண்டிக்கத்தக்கது என்றும் டெல்லி சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு தமிழக வெற்றி கழகம் தனது முழு ஆதரவை வழங்கி உள்ளது என்றும் மாணவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் பாதிக்கும் நீட் தேர்வை வைத்து தமிழக வெற்றிக்கழகம் ஒருபோதும் சுயநல வாக்கு அரசியல் செய்யாது என்றும் கல்வியை தற்போது பொது பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் மாநிலங்கள் தன்னாட்சியுடன் கல்வி மற்றும் மருத்துவ சேர்க்கையை தீர்மானிக்க இது உதவும் என்றும் குறிப்பிட்டதோடு சட்ட நடைமுறை சிக்கல்கள் தீரும் வரை சிறப்பு பொதுப் பட்டியல் ஒன்றை உருவாக்கி மாநில அரசுகளுக்கு மருத்துவக் கல்வியில் முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு மாணவர்களின் உணர்வுகளை மதித்து நீட் தேர்வு முறையை தேசம் முழுவதும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

 

 

Tags :

Share via
Logo