எஸ். பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக் கு
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98.25 கோடி முறைகள் நடந்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவ் வழக்கில் ஆறு வாரங்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அறப்போர் இயக்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஜூலை 22 அன்று இந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கூறும் கோப்புகளை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்தது குறித்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்ததோடு சட்டமன்றத் தேர்தல் அல்லது ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஏற்க முடியாது என்றும் குற்றவாளிகளை காப்பாற்றவே அனைவரும் முயல்கிறார்கள் என்று கோவமாக தெரிவித்தார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற பொதுத்துறை செயலாளர் நீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகஸ்ட் 3, 2026 அன்று காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆச்சராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.
Tags :

















