"தலைகுனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்" - மோடி

மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியின் சிலை காற்றில் கீழே விழுந்து உடைந்து நொறுங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோரியுள்ளார். இந்திய தாயின் மகனான சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல. காற்று, மழையில் சிலை சேதமடைந்ததற்கு எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :