பெற்றோர் திட்டியதால் தீக்குளித்த சிறுவன்

by Staff / 26-06-2024 03:53:44pm
பெற்றோர் திட்டியதால் தீக்குளித்த சிறுவன்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பையைச் சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் - மீனா தம்பதி. இவர்களது மகன் தோனி (12). 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்துவிட்டு, வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சிறுவன், தன்மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்து, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அலறம் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழந்தான்.

 

Tags :

Share via
Logo