50 வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு-நகர்மன்ற கூட்டத்தில் துணைத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
தென்காசி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை கூட்ட அரங்கில் வைத்து திமுகவை சேர்ந்த தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில் திமுகவை சேர்ந்த நகர மன்ற துணைத் தலைவர் சுப்பையா தென்காசி நகராட்சியில் 50 வீடுகளுக்கு முறைகேடாக இணைப்பு ஒன்றிற்கு ரூபாய் 30 ஆயிரம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளதாகவும் அனைவருக்கும் சம்பந்தம் உள்ள நிலையில் ஆனால் நகராட்சி ஊழியராக இருந்த ஒரு அப்பாவி பிளம்பர் மணிவண்ணனை மட்டும் பலி கடாவாக்கி சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது. எனவே கமிஷனர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறையில் இது குறித்து புகார் செய்வேன் என காரசாரமாக கூட்டத்தில் பேசினார். நகராட்சி நிர்வாகம் மீது நகர மன்ற துணைத் தலைவரை குற்றச்சாட்டை எழுப்பியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், பொன்னம்மாள் கருப்பசாமி ஆகியோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Tags : நகர்மன்ற கூட்டத்தில் துணைத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு