20 லட்சம் ரூபாய்க்கு கஞ்சா விற்ற பெண்மணி கைது

by Staff / 14-03-2024 05:28:15pm
20 லட்சம் ரூபாய்க்கு கஞ்சா விற்ற பெண்மணி கைது

ஹைதராபாத்த்தில் தினமும் 20 லட்ச ரூபாய்க்கு கஞ்சா விற்ற பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார். நானகிராம் குடா பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்ற பெண்ணை தெலங்கானா போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர், அப்போது அவரிடம் கஞ்சா வாங்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று விசாரணை நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories