17 ஆவது ஆண்டில் காலடி வைக்கும் தேமுதிக
தேமுதிக கட்சி 17 ஆவது ஆண்டின் தொடக்க நாள் கொண்டாட்டத்தை கட்சி கொடியேற்றி தொடங்கியுள்ளது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி 16 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 17 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இதனை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி தொடங்கினார். விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கினார். தற்போது இந்த கட்சி 17 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது குறித்து தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து நாளை (14.09.2021) 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலில்,அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம்
Tags :